×

மோடி கூட்டத்திற்கு ரூ.500 தருவதாக கூறி ரூ.100 கொடுத்து கூலி தொழிலாளர்களை ஏமாற்றிய பாஜக

 

பெங்களூருவில் மோடி கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு 500 ரூபாய் கொடுப்பதாக அழைத்துச் சென்று வெறும் 100 ரூபாய் கொடுத்ததாக கூலித்தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபலாபூர் மாவட்டம் சித்லுகட்டா தாலுக்காவில் பல கட்டிட வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளை பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடி பெங்களூரு வருகை தந்த போது பிரச்சாரக் கூட்டத்திற்கு 500 ரூபாய் கொடுப்பதாக அழைத்து சென்றுள்ளனர். காலை அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளிகளுக்கு பாஜக நிர்வாகிகள் காலை சிற்றுண்டி மட்டும் வழங்கியுள்ளனர். 

மதியம் தங்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தங்களுக்கு 500 ரூபாய் கொடுப்பதாக அழைத்துச் சென்று விட்டு மாலை வரை உணவு கொடுக்காமல் வெறும் 100 ரூபாய் மட்டும் கொடுத்ததாக கூலித்தொழிலாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுக்கு கொடுக்க வேண்டிய மீதி பணத்தை பெற்று தர வேண்டும் என காவல்நிலையத்தில் அவர்கள் புகார் மனு கொத்த நிலையில் காவல் நிலையம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

கூலி கொடு கூலி கொடு தொழிலாளிகளை ஏமாற்றாதே என ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன் முழக்கங்களும் தொழிலாளர்களால் எழுப்பப்பட்டது. தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையின் அறிவுரைப்படி பாஜக நிர்வாகிகள் அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு சேரிய வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.