×

விவசாய கூலி தொழிலாளர்கள் சென்ற டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 5 பேர் பலி

 

விவசாய கூலி தொழிலாளர்கள் சென்ற டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 5 பெண் கூலி தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூரை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விவசாய வேலைக்காக டிராக்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சாலை மீது இருக்கும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து கூலி தொழிலார்கள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் டிராக்டரில் பயணித்த இதில் பால்தூரு பார்வதி, சங்கரம்மா, வண்ணம்மா, ரத்தினம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த லட்சுமி, மகேஷ், சுங்கம்மா ஆகியோர் பெல்லாரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சுங்கம்மா உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் மொத்தம் 5 பெண் கூலி தொழிலாளர்கள் இறந்தனர்.   சரோஜம்மா, லட்சுமி,  நிலைமை கவலைக்கிடமாக  உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் விவசாய கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இதே போன்று ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில்  விவசாயக் கூலிகள் சென்ற ஆட்டோமீது மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பிடித்ததில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது அதேபோன்று உயர் அழுத்த  கம்பி அறுந்து விழுந்து ஐந்து பெண் கூலி தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.