×

கேரளாவில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத நடிகை அமலா பால்!

 

கேரளா மாநிலம் திருவைராணிக்குளம் மஹாதேவ கோயிலுக்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கோயிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் நடிகை அமலா பால் எழுதியுள்ளார். 

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ளது திருவைராணிக்குளம் மகாதேவர் கோயில். கடந்த திங்கட்கிழமை நடிகை அமலாபால் கோயிலுக்குச் சென்றபோது, ​​அவர் கோயில் அதிகாரிகளால் தரிசனம் செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.கோயில் வளாகத்திற்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களை மேற்கோள் காட்டி, தனக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியுள்ள அமலா பால், கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து அம்மனை தரிசனம் செய்யும்படி கோயில் நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமலா பால், “2023 ஆம் ஆண்டிலும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் இருப்பது வருத்தமாக உள்ளது,  கடவுளை கோயிலுக்குள் சென்று தரிசிக்கவில்லை என்றாலும் அவரது ஆற்றலை என்னால் உணர முடிந்தது.மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.


இந்து பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் வழக்கத்தை பின்பற்றுவதால் நடிகருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிற மதத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர், ஆனால் அது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு பிரபலம் வந்தால் அது சர்ச்சையாகி விடுகிறது என அறக்கட்டளை செயலாளர் பிரசூன் குமார் தெரிவித்துள்ளார்.