×

பஞ்சாபில் ஆம் ஆத்மி அமோக வெற்றி - நாளை ஆளுநரை சந்திக்கிறார் பகவந்த் மன்

 

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். 

117 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், முதல் முறையாக அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பஞ்சாபில் படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொக்குதிகளில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 59 இடங்கள் பின்னடைவாகும். கடந்த முறை 77 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியயமைத்தது குறிப்பிடதக்கது. இதேபோல் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

இந்நிலையில், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன், நாளைய தினம் அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கச் சென்ற பகவந்த் மன், இன்று மாலை பதவியேற்கும் தேதி அறிவிக்கப்படும் எனவும், நாளைய தினம் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.