×

இந்தியாவில் 99 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்: இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 9,36,181 லிருந்து 9,68,876 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,12,814 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,915 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . கடந்த 24 மணிநேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 606 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள். அவர்களுள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பல மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு பரவி
 

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 9,36,181 லிருந்து 9,68,876 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,12,814 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,915 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . கடந்த 24 மணிநேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 606 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள். அவர்களுள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பல மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு பரவி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவால் 99 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை 1,302 மருத்துவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களுள் 73 மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்ட வயதினர் என்றும் 19 பேர் 35 முதல் 50 வயதுக்குள்ளானவர்கள் என்றும் 7 பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் மருத்துவ பணியில் ஈடுபடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.