×

93.5 சதவிகிதமாக அதிகரிப்பு – இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 59 லட்சத்து 43 ஆயிரத்து 122 பேர். குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 89 லட்சத்து 63 ஆயிரத்து 186 நபர்கள். இறந்தவர்கள் 13 லட்சத்து 43 ஆயிரத்து 378 பேர். கொரோனா தொற்று வேகமாக பரவிய நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், கடந்த ஒரு மாதமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகக் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இந்தியாவில் கடந்த ஒன்றரை
 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 59 லட்சத்து 43 ஆயிரத்து 122 பேர். குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 89 லட்சத்து 63 ஆயிரத்து 186 நபர்கள். இறந்தவர்கள் 13 லட்சத்து 43 ஆயிரத்து 378 பேர்.

கொரோனா தொற்று வேகமாக பரவிய நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், கடந்த ஒரு மாதமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகக் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக, தினசரி கொரோனா பாதிப்பை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், தொடர்ந்து 11-வது நாளாக, தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கு கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44,739 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் புதிதாக 38,617 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,122 குறைந்து தற்போது 4,46,805 ஆக உள்ளது. கொவிட் மொத்த பாதிப்பில் இது 5.01 சதவீதம்.

குணமடைவோர் வீதம் இன்று 93.52 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 83,35,109 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 78.9 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

இந்திய அளவில் தினசரி நோயாளிகள் குணமடைந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஆறாம் இடத்தில் உள்ளது. புதிய நோயாளிகள் அதிகரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எட்டாம் இடத்தில் உள்ளது. தினசரி நடக்கும் கொரோனா மரணங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஒன்பதாம் இடத்தில் உள்ளது.