×

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91,852ஆக உயர்ந்தது…. லாக்டவுன் தளர்வால் கொரோன வைரஸ் பரவல் தீவிரமாகுமா?

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்து வருகிறது. வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, நேற்று இரவு நிலவரப்படி கொரோனா வைரஸால் மொத்தம் 1.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்,
 

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்து வருகிறது.

வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, நேற்று இரவு நிலவரப்படி கொரோனா வைரஸால் மொத்தம் 1.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 91,852 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டனர். தொற்று நோய்க்கு 5,408 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் அதேவேளையில் அதிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நல்ல செய்தியாகும்.

அதேசமயம், லாக்டவுன் 4.0 நேற்றோடு முடிவடைந்து விட்டது. இன்று முதல் பொது போக்குவரத்து ஆரம்பமாகி விட்டது மற்றும் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இனி பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனை தவிர்க்க வேண்டுமானால் வீட்டை வெளியே வந்தாலே மாஸ்க் அணிய வேண்டும், சமூக விலகலை கடைப்பிடித்தல் ஆகியவற்றை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.