×

9 நாள் திருமணம், 500 கோடி பட்ஜெட், கர்நாடகா அமைச்சர் வீட்டு கலர்ஃபுல் கல்யாணம்.

பிஜேபி அரசின் அமைச்சர் ஸ்ரீராமுலு மகள் ரக்ஷிதாவின் திருமணம் இந்த வார இறுதியில் துவங்குகிறது. 9 நாட்கள் நடக்க இருக்கும் இந்தத் திருமணத்திற்கு ஒரு லட்சம் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. திருமணத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி டெல்லியின் முக்கியத் தலைவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர். இது தவிர கர்நாடக பிஜேபி பிரமுகர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. காஸ்ட்லி திருமணங்களுக்கும் கர்நாடகாவுக்கும் அப்படி ஒரு பொருத்தம். இப்போது பிஜேபியில் இருந்து விலகி இருக்கும் முன்னாள்
 

பிஜேபி அரசின் அமைச்சர் ஸ்ரீராமுலு மகள் ரக்‌ஷிதாவின் திருமணம் இந்த வார இறுதியில் துவங்குகிறது. 9 நாட்கள் நடக்க இருக்கும் இந்தத் திருமணத்திற்கு ஒரு லட்சம் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. திருமணத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி டெல்லியின் முக்கியத் தலைவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர். இது தவிர கர்நாடக பிஜேபி பிரமுகர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. 

காஸ்ட்லி திருமணங்களுக்கும் கர்நாடகாவுக்கும் அப்படி ஒரு பொருத்தம். இப்போது பிஜேபியில் இருந்து விலகி இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டியின் மகள் பிரம்மனியின் திருமணம்தான் இப்போதைக்கு கர்நாடக ரெக்கார்டு.

அதை முறியடிக்க களத்தில் குதித்து இருக்கிறார் இன்றைய பிஜேபி அரசின் அமைச்சர் ஸ்ரீராமுலு. அவரது மகள் ரக்‌ஷிதாவின் திருமணம் இந்த வார இறுதியில் துவங்குகிறது. 9 நாட்கள் நடக்க இருக்கும் இந்தத் திருமணத்திற்கு ஒரு லட்சம் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. திருமணத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி டெல்லியின் முக்கியத் தலைவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர். இது தவிர கர்நாடக பிஜேபி பிரமுகர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. 

பெங்களூரு பேலஸ் கிரவுண்டில் 40 ஏக்கர் பரப்பளவில், அதாவது 16 லட்சம் சதுர அடிப்பரப்பளவில் பந்தல் போடப்படுகிறது. இது தவிர, திருமணத்தை ஒட்டிய கலை நிகழ்ச்சிகளுக்காக 27 ஏக்கர் பரப்பளவில் அரங்குகள் அமைக்கப் படுகின்றன. கார் பார்க்கிங்குக்கு மட்டும் 15 ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களும், தொழிலாளர்களும் இரவு பகலாக, திருமண மேடை அலங்காரம் உள்ளிட்ட பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் திருமண மேடை மட்டும் ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷா கோவிலை மாதிரியாகக் கொண்டு 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. கூடவே ரஜினியின் ராக்கம்மா கையத்தட்டு உள்ளிட்ட பல பாடல் காட்சிகளில் இடம் பெற்ற மேல்கோட்டை குளத்தின் மாதிரி வடிவமும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணியில் மட்டும் 200 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

திருமணம் முடிந்தபின் பெல்லாரி நகரில் வரவேற்பு நடக்க இருக்கிறது. அதற்கும் பாலிவுட் கலைஞர்கள் தலைமையில் வேலை நடக்கிறது. மணமகளுக்கு அந்த 9 நாளும் மேக்கப் போட்டுவிடப் போவது தீபிகா படுகோனின் மேக்கப் மேன்.பிரபல பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் சந்தனா சந்தாரியா மணமக்களின் உடைகளை டிசைன் செய்கிறார்.திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க அம்பானி மகள் ஈஷாவின் திருமணத்தை படம்பிடித்த ஜெயராம் பிள்ளையும், திலீபும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்ப் வருகையை விட இந்தத் திருமணம் இந்திய மீடியாக்களில் அதிகம் பேசப்படும் என்று தெரிகிறது.