×

’’எங்க வேதனையைப் பாருங்க ஜெகன் அண்ணா!’’-அழுது புலம்பியவாறு பிரசவ வலி எடுத்த பெண்ணை 9 கி.மீ. டோலியில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்

பிரசவ வலி எடுத்த கர்ப்பிணி பெண்ணை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத வசதியின்மையால் 9 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச்சென்று அங்கே மரத்தடியில் டோலியை இறக்கி வைத்து ஆம்புலன்சுக்காக 2 மணி நேரம் காத்திருந்து, அதுவும் வராமல் போனதால் ஆட்டோவை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். துங்காடா மலை கிராமத்தின் இந்த அவலம் தீர, அம்மக்கள் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழுதபடியே கோரிக்கையும் விடுத்துள்ளனர். ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள
 

பிரசவ வலி எடுத்த கர்ப்பிணி பெண்ணை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத வசதியின்மையால் 9 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச்சென்று அங்கே மரத்தடியில் டோலியை இறக்கி வைத்து ஆம்புலன்சுக்காக 2 மணி நேரம் காத்திருந்து, அதுவும் வராமல் போனதால் ஆட்டோவை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். துங்காடா மலை கிராமத்தின் இந்த அவலம் தீர, அம்மக்கள் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழுதபடியே கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மலை கிராமங்கள் உள்ளன.
இரண்டு மாவட்டங்களிலும் உள்ள மலை கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை இல்லாத மலை கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவசர காலங்களில் அடையும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

குறிப்பாக நிறைமாத கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்வது ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு அந்தப் பகுதிகளில் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் கிடையாது.

இந்த நிலையில் நேற்று விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துங்காடாகிராமத்தை சேர்ந்த கஸ்தூரி தேவுடம்மா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
துங்காடா மலை கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல சரியான சாலை வசதி கிடையாது. எனவே அந்த கர்ப்பிணியை டோலியில் படுக்க வைத்து ஒன்பது கிலோ மீட்டர் தூரம் உறவினர்கள் மலைப் பகுதிகள் வழியாக தூக்கி சென்றனர்.

அப்போது உடன் வந்த பெண்கள் ஆந்திர முதல்வரை குறிப்பிட்டு, ‘’ ஜெகன் அண்ணா நாங்கள் அடையும் வேதனையை பாருங்கள், எங்கள் கிராமங்களுக்கு உடனடியாக சாலை வசதியை செய்து கொடுங்கள்’’ என்று அழுது புலம்பியவாறு சென்றனர்.

சாலை வசதி உள்ள இடத்திற்கு வந்த பின் அவர்கள் அரசு ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு மிக நீண்ட காலதாமதம் ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணியை சுமார் 2 மணி நேரம் மரத்தடியில் படுக்க வைத்திருந்தனர்.

இரண்டு மணி நேரம் கழித்தும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் ஆட்டோ ஒன்றை வரவழைத்து கர்ப்பிணியை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.