×

இடி, மின்னல் தாக்கி பீகாரில் 88 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

பாட்னா: இடி, மின்னல் தாக்கி பீகாரில் 88 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி நேற்று 88 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பீகாரில் 23 மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. அத்துடன் உத்தரபிரதேச மாநிலமும் இடியுடன் கூடிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து மின்னல்
 

பாட்னா: இடி, மின்னல் தாக்கி பீகாரில் 88 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி நேற்று 88 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பீகாரில் 23 மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. அத்துடன் உத்தரபிரதேச மாநிலமும் இடியுடன் கூடிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி தன்னுடைய இரங்கல் ட்வீட்டில் “உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக பலர் உயிரிழந்தது பற்றிய சோகமான செய்தி கிடைத்தது. மாநில அரசுகள் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன” என்றார்.

மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட்டில் “பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் பலர் இறந்ததை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். இரு மாநிலங்களிலும் நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பேரழிவில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என்றார்.