×

ஒரே நாளில் 86 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடக்கம் முதலே அதிகமாகவே இருக்கிறது. லாக்டெளன் காலத்திலும் புதிய நோயாளிகள் அதிப்பது குறையவே இல்லை. தற்போது லாக்டெளன் தளர்த்தப்பட்டதால் அது இன்னும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 12 லட்சத்து 39 ஆயிரத்து 588 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்து 523 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9
 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடக்கம் முதலே அதிகமாகவே இருக்கிறது. லாக்டெளன் காலத்திலும் புதிய நோயாளிகள் அதிப்பது குறையவே இல்லை. தற்போது லாக்டெளன் தளர்த்தப்பட்டதால் அது இன்னும் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 12 லட்சத்து  39 ஆயிரத்து 588 பேர்.   கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்து 523 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 65 ஆயிரத்து 065 பேர்.  

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பு, தினந்தோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை என கடந்த இரு வாரங்களாக உலகளவில் முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 33,344 பேரும், பிரேசிலில் 16,282 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 87,381 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 86,961 கொவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளில் 76 சதவீதம் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமே 20,000 அதிகமான புதிய பாதிப்புகளுக்கு காரணமாக உள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து 8,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 1,130 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொவிட் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களில் 86 சதவீதம் பேர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

455 இறப்புகள் மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகியுள்ள நிலையில், உத்திரப் பிரதேசத்தில் 94 நபர்களும், கர்நாடகாவில் 101 நபர்களும் இறந்துள்ளனர்.