×

85 சதவிகிதத்தைக் கடந்தது – இந்தியாவில் குணமடைவதில் முன்னேற்றம்

கொரோனா நோய்த் தொற்றில் புதிய நோயாளிகளில் அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 60 லட்சத்து 45 ஆயிரத்து 050 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 223 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 54 ஆயிரத்து 607 பேர். நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில்,
 

கொரோனா நோய்த் தொற்றில் புதிய நோயாளிகளில் அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 60 லட்சத்து 45 ஆயிரத்து 050 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 223 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 54 ஆயிரத்து 607 பேர்.

நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 43,660 பேரும், பிரேசிலில் 30,454 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 72,106 பேராக அதிகரித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக, நாட்டில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்ததால், குணமடைந்தோர் வீதம் 85%-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கை, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 82,203 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 72,049 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை, 57,44,693 ஆக அதிகரித்துள்ளது. இது குணமடைந்தோர் எண்ணிக்கையில், இந்தியாவின் உலகளவில் முதன்மையான நிலையில் உள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால், சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தோர்களுக்குமான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களை விட (9,07,883), குணமடைந்தவர்கள் 48 லட்சத்துக்கும் அதிகமாக (48,36, 810) உள்ளனர். இது 6.32 மடங்கு அதிகம்.

மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13.44% -மாக குறைந்துள்ளது. குணமடைந்தவர்களில் 75 % பேர் மகாராஷ்டிரா, கர்நாடாக, ஆந்திரா, தமிழகம், கேரளா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 986 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,04,591 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.