×

82.9 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. லாக்டெளன் அறிவிக்கப்பட்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆயினும், கடந்த ஒரு மாதமாக அதில் ஒரு மாற்றம் தெரிகிறது. புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைவதும், அதனால் மரணங்களின் எண்ணிக்கை குறைவது ஆறுதலான செய்திகளாக இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 2 நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 30,000 என்ற அளவில் பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 29,163 பேருக்கு புதிதாக தொற்று
 

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. லாக்டெளன் அறிவிக்கப்பட்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆயினும், கடந்த ஒரு மாதமாக அதில் ஒரு மாற்றம் தெரிகிறது. புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைவதும், அதனால் மரணங்களின் எண்ணிக்கை குறைவது ஆறுதலான செய்திகளாக இருக்கின்றன.

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 30,000 என்ற அளவில் பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 29,163 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகவே, தினசரி தொற்று பாதிப்பு 50,000க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,791 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசு, கோவிட் பரிசோதனையை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகளவில் மேற்கொண்டு வருகிறது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை இன்று 12,65,42,907 -ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,53,401 -ஆக உள்ளது. நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82,90,370 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் தற்போது 93.42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 78.40 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

இந்திய அளவில் தினசரி நோயாளிகள் குணமடைந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது. புதிய நோயாளிகள் அதிகரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளது. தினசரி நடக்கும் கொரோனா மரணங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஒன்பதாம் இடத்தில் உள்ளது.