×

8 ஆண்டுகளில் 28 ஆயிரம் பேர் காணவில்லை – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 28 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக அஸ்ஸாமில் மட்டும் 19,344 பேர் காணாமல் போய் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 28 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக அஸ்ஸாமில் மட்டும் 19,344 பேர் காணாமல் போய் உள்ளனர். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை
 

கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 28 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக அஸ்ஸாமில் மட்டும் 19,344 பேர் காணாமல் போய் உள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 28 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக அஸ்ஸாமில் மட்டும் 19,344 பேர் காணாமல் போய் உள்ளனர்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில், வடகிழக்கு பகுதியில் உள்ள எட்டு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு அண்டுகளில் 27,967 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில், 2018, 19ம் ஆண்டுக்கான தகவல் இன்னும் கிடைக்கவில்லை அதிகபட்சமாக அஸ்ஸாமில் 19,344 பேரும், திரிபுராவில் 4455 பேரும் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போனவர்களில் அதிகம் பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

2015ம் ஆண்டில் அஸ்ஸாமில் காணாமல் போனவர்களில் 2196 பேர் குழந்தைகள், 2613 பேர் பெண்கள், 1528 பேர் மட்டுமே ஆண்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தோராயமாக 3000ம் பேர் காணாமல் போய் உள்ளனர். 2015-17 காலக்கட்டத்தில் காணாமல் போனவர்களில் 5130 குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் குழந்தைகள், பெண்கள் காணாமல் போகும் சம்பவம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.