☰
×

கார் விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு 

 

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் இன்று அதிகாலை 2 மணியளவில் SCORPIO கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஞ்சி-பாட்னா நெடுஞ்சாலையில், பீகாரைச் சேர்ந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற ஸ்கார்பியோ கார்விபத்துக்குள்ளானதில், நான்கு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை 33-ல் அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

ஸ்கார்பியோ காரில் பயணித்த 14 பேரும், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஜங்காரோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கோவிலுக்காக ராஜ்ரப்பாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த வாகனத்தில் இருந்து மக்களை வெளியே இழுக்கவும், காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவும் அவர்கள் உதவினர். காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.