×

73வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: 6வது முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாடு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றது. சுதந்திர காற்றை நம் மக்கள் சுவாசிக்கத் தொடங்கி 73 ஆண்டுகளாகும் நிலையில் இந்த பொன் நாளை நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி
 

நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

புதுடெல்லி:  நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாடு  1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றது. சுதந்திர காற்றை நம் மக்கள் சுவாசிக்கத் தொடங்கி 73 ஆண்டுகளாகும் நிலையில்  இந்த பொன் நாளை  நாட்டு  மக்கள் உற்சாகத்துடன்   கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து  டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர்  மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.பிரதமராக நரேந்திர மோடி செங்கோட்டையில் 6வது முறையாக கொடியேற்றியுள்ளார். 

அவருக்கு  முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர்   அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.