×

மகாராஷ்டிராவில் வரலாறு காணாத நிலச்சரிவு… 73 சடலங்கள் மீட்பு… 47 பேர் மாயம்!

தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தரகாண்ட், கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பெய்துவரும் தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாநிலத்தின் ராய்காட், ரத்னகிரி மற்றும் சதாரா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ராய்காட்டின் தாலியே கிராமம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
 

தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தரகாண்ட், கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பெய்துவரும் தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாநிலத்தின் ராய்காட், ரத்னகிரி மற்றும் சதாரா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ராய்காட்டின் தாலியே கிராமம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இங்கு மட்டும் அதிகபட்சமாக 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக சேர்த்து தற்போதுவரை 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 47 பேர் காணமால் போயுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 34 குழுக்கள் களமிறங்கியுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்திருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 306 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.