×

முதல் அலையை விட கொடூரம் காட்டும் 2ஆம் அலை… 4 மாதங்களில் 719 மருத்துவர்கள் பலி!

கொரோனாவின் கோரதாண்டவத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள் தான். இரவு பகல் பாராமல் எப்போதும் பிபிஇ கிட் அணிந்துகொண்டு மக்களைக் காப்பாற்ற அயராது உழைக்கின்றனர். அவர்களின் பணி நிச்சயம் மெச்சக்கூடியது. அவர்கள் இல்லை என்றால் இந்த நிலையை விட மிக மோசமான நிலைக்கு இந்தியா சென்றிருக்கக் கூடும். கொரோனா நோயாளிகளிடமிருந்து நமக்கு தொற்று பரவ கூடாது என்று அறிவுரை கூறும் அவர்கள், 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளுடனே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் கொஞ்சம் கவனமாக
 

கொரோனாவின் கோரதாண்டவத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள் தான். இரவு பகல் பாராமல் எப்போதும் பிபிஇ கிட் அணிந்துகொண்டு மக்களைக் காப்பாற்ற அயராது உழைக்கின்றனர். அவர்களின் பணி நிச்சயம் மெச்சக்கூடியது. அவர்கள் இல்லை என்றால் இந்த நிலையை விட மிக மோசமான நிலைக்கு இந்தியா சென்றிருக்கக் கூடும்.

கொரோனா நோயாளிகளிடமிருந்து நமக்கு தொற்று பரவ கூடாது என்று அறிவுரை கூறும் அவர்கள், 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளுடனே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டாலும் கொரோனாவால் எளிதில் தாக்கப்படுவார்கள். அதேபோல முன்பை விட கூடுதல் பணிச்சுமையால் அவர்களுக்கு மன அழுத்தமும் அதிகரிக்கும். இதையெல்லாம் தாண்டியே நமக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் எளிதில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரையும் இழக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 111 பேரும், டெல்லியில் 109 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 32 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இதற்கு முன்பு வரை டெல்லி முதலிடத்தில் இருந்து வந்தது.

சமீப நாட்களாக பீகாரில் மருத்துவர்கள் பலி ஆகியிருப்பதால் டெல்லியை முந்தியிருக்கிறது. கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் நீடித்த கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். ஆனால் நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீடித்திருக்கும் இரண்டாம் அலையில் அந்த எண்ணிக்கையைத் தொட்டுவிட்டது அதிர்ச்சளிக்கிறது.