×

60 தெரு நாய்களை வீட்டில் வளர்க்கும் 70 வயது மூதாட்டி !

கேரளாவில் 60 தெரு நாய்களை வளர்க்கும் மூதாட்டியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். கேரளாவின் கோட்டையத்தைச் சேர்ந்த ருக்மணியம்மா என்கிற அந்த மூதாட்டி, அப்பகுதியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தினமும் உணவிட்டு வளர்த்து வருகிறார். நாய்களை அடைப்பதற்கு என தன் வீட்டில், இடம் ஒதுக்கி அவற்றுக்கு தனித் தனி ஷெல்ப் கட்டியுள்ளார். காலை, மாலை நேரங்களில் மட்டும் அவற்றை வெளியே உலவ விட்டு மற்ற நேரங்களில் அவற்றுக்கான குடிலில் அடைத்து விடுகிறார். அவற்றுக்கு உணவு, பிஸ்கட்
 

கேரளாவில் 60 தெரு நாய்களை வளர்க்கும் மூதாட்டியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

கேரளாவின் கோட்டையத்தைச் சேர்ந்த ருக்மணியம்மா என்கிற அந்த மூதாட்டி, அப்பகுதியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தினமும் உணவிட்டு வளர்த்து வருகிறார். நாய்களை அடைப்பதற்கு என தன் வீட்டில், இடம் ஒதுக்கி அவற்றுக்கு தனித் தனி ஷெல்ப் கட்டியுள்ளார்.

காலை, மாலை நேரங்களில் மட்டும் அவற்றை வெளியே உலவ விட்டு மற்ற நேரங்களில் அவற்றுக்கான குடிலில் அடைத்து விடுகிறார். அவற்றுக்கு உணவு, பிஸ்கட் ஆகியவற்றையும் ருக்மணியம்மா அளித்து வருகிறார்.

“தெரு நாய்களை வளர்ப்பது கடினமானதுதான், சில நேரங்களில் கடித்து விடும். ஆனால் அவற்றை வளர்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என ருக்மணியம்மா கூறுகிறார். அவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது.