×

ஒடிசாவில் 70  மாணவர்களுக்கு கொரோனா... 3ம் அலை பரவலோ என மக்கள் அச்சம்..

 

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழகம், டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல் ஒடிசாவில் 9,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல்  8 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குm பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 53 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்களைத் தவிர, வீர் சுரேந்திர சாய் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் 22 மாணவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.