×

7 பேருக்கு கொரோனா… முழுவதுமாக முடக்கப்படும் மும்பை தாராவி!

மும்பையில் உள்ள தாராவி பகுதியை முழுவதுமாக முடக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்ரா எம்.பி. வலியுறுத்தியுள்ளார். மும்பையில் உள்ள தாராவி பகுதியை முழுவதுமாக முடக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்ரா எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைபகுதியாக கருதப்படும் தாராவியில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கும் இந்த பகுதியில்
 

மும்பையில் உள்ள தாராவி பகுதியை முழுவதுமாக முடக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்ரா எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 

மும்பையில் உள்ள தாராவி பகுதியை முழுவதுமாக முடக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்ரா எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைபகுதியாக கருதப்படும் தாராவியில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே, தாராவி பகுதியை முழுவதுமாக முடக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. ராகுல் ஷெவாலே வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாராவியில் கொரோனா சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தாராவி மக்களை தனிமைப்படுத்தவதற்கான ஏற்பாடுகளையும் செய்துதர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.