×

6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து- ஏர் இந்தியா

 

எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னை-சிங்கப்பூர், டெல்லி-நியூயார்க், டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ஆகஸ்ட் வரை விமான சேவைகளை ரத்து செய்து ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

விமான எரிபொருள் விலை உயர்வு, விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளால் 6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. சென்னை - சிங்கப்பூர்,மும்பை - நியூயார்க், மும்பை - டாக்கா, டெல்லி - சிகாகோ, டெல்லி - ஷாங்காய், டெல்லி - மாலே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருகிற ஆகஸ்டு மாதம் வரை 6 விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டாலும் 1200 சர்வதேச விமான சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.