×

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் வாயுக் கசிவு - 6 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு..

 

குஜராத் மாநிலம் சூரத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் சச்சின் ஜிஐடிசி பகுதியில் இயங்கி வரும் இரசாயனத்  தொழிற்சாலையில்,  இன்று ஊழியர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டிருந்தனர்.  திடீரென அதிகாலையில்  தொழிற்சாலையில்  வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. வாயு கசிவால் ஏற்பட்ட பெரும் புகையின் காரணமாக மூச்சு திணறல்  காரணமாக   6 தொழிலாளார்கள்  பரிதாபமக உயிரிந்தனர்.  மேலும் 20 பேர்  மூச்சுத் திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூரத் காவல் துறையினர்,  பாதிக்கப்பட்ட 20 பேரை மீட்டு அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  தொழிற்சாலையில் இருந்து இரசாயனம்  டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.  அந்த ரசாயணத்தை லாரி டிரைவர், தொழிற்சாலை முன்பு இருந்த  பாதாள சாக்கடையில் ஊற்றியதாகவும், அப்போது கழிவு நீருடன் இரசாயனம் கலந்ததால் வாயுக் கசிவு ஏறட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

வாயுக் கசிவை  அறிந்ததும் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதற்குள்ளாக,  வாயு கசிவால் ஏற்பட்ட புகையின் காரணமாக  மூச்சுத்திணறல் ஏற்பட்டு  6 பேர் பரிதாபமாக உயிரிழந்தாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் இந்த சம்பவம் குறித்து சூரத்  காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.