×

தாயுடன் 5 மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தாயுடன் சேர்ந்து ஐந்து மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சத்தீஷ்கார் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கார் மாநிலம் மகாசமந்த் மாவட்டத்தில் பெம்சா கிராமத்தை சேர்ந்தவர் உமாசாகு(வயது45). 18 வயதுடைய அன்னபூர்ணா,16 வயதுடைய யசோதா, 14 வயதுடைய பூமிகா, 12 வயதுடைய கும்கும், 10 வயதுடைய துளசி என்று ஐந்து மகள்கள். உமாசாவுக்கும் அவரது கணவருக்கும் நேற்று முன் தினம் இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறில் விரக்தி அடைந்த உமாசாகு,
 

தாயுடன் சேர்ந்து ஐந்து மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சத்தீஷ்கார் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கார் மாநிலம் மகாசமந்த் மாவட்டத்தில் பெம்சா கிராமத்தை சேர்ந்தவர் உமாசாகு(வயது45). 18 வயதுடைய அன்னபூர்ணா,16 வயதுடைய யசோதா, 14 வயதுடைய பூமிகா, 12 வயதுடைய கும்கும், 10 வயதுடைய துளசி என்று ஐந்து மகள்கள்.

உமாசாவுக்கும் அவரது கணவருக்கும் நேற்று முன் தினம் இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறில் விரக்தி அடைந்த உமாசாகு, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். தான் தற்கொலை செய்துகொண்டால் மகள்கள் அனாதையாகி விடுவார்களோ என்று வேதனைப்பட்ட உமாசாகு, மகள்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

தாயின் முடிவுக்கு மகள்களும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 6 பேரும் மகாசமந்த் – பெல்சோண்டா இடையே இருக்கும் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அந்த அந்த வழியாக வந்த ரயில் முன் 6 பேரும் பாய்ந்தனர்.

இந்த சம்பவத்தில் 6 பேரும் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தீஷ்காரை அதிர வைத்திருக்கிறது.