×

ஒரே நாளில் 57 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியா கொரோனா நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 64 லட்சத்து 43 ஆயிரத்து 411 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது. கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 6,443,411 பேரும், பிரேசில் நாட்டில் 32,78,895 பேரும் இந்தியாவில் 25,25,222 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள்
 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 64 லட்சத்து 43 ஆயிரத்து 411 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 6,443,411  பேரும், பிரேசில் நாட்டில்  32,78,895 பேரும் இந்தியாவில் 25,25,222 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 60,600 பேரும், பிரேசிலில் 49,274 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 65,609 பேராக அதிகரித்துள்ளனர்.

ஆயினும்கூட இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் இருப்பது ஆறுதல் அளிக்கக்கூடியது. கடந்த  24 மணி நேரத்தில் 57,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

New Delhi, Aug 07 (ANI): A health worker in personal protective equipment (PPE) collects a sample using a swab from a girl at a local health centre to conduct tests for the coronavirus disease (COVID-19), amid the spread of the disease at Ajmeri Gate area, in Delhi on Friday. (ANI Photo)

குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், இந்தியாவின் குணமடைந்தோர் விகிதம் 70 சதவீதத்தைத் தாண்டியதுடன், மேலும், மேலும் அதிகமானோர் குணமடைவதை  உறுதி செய்துள்ளது.

இந்த ஆரோக்கியமான நிலைமையை மேலும் அதிகரிக்கும் வகையில், குணமடைந்த நோயாளிகளின் விகிதம் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 50 சதவீத அளவைத் தாண்டியுள்ளது. இது தேசிய குணமடைந்தோர் விகிதத்தை விட அதிகமாகும்.

இன்றோடு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது (18,08,936.  இந்தியாவில் இறப்பு விகிதம் உலக சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது. தற்போது  அது 1.94 சதவீதமாக உள்ளது.

சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் என்னும் இந்தியாவின் உத்தி, கடந்த 24 மணி  நேரத்தில் 8,68,679 மாதிரிகளை சோதனை செய்து மற்றொரு உச்சத்தை அடைய காரணமாகியுள்ளது.  இதுவரை, மொத்தம் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 2.85 கோடிக்கும் அதிகமாகும்.