×

ஒரே நாளில் 50 மருத்துவர்கள் மரணம்… பகீர் கிளப்பும் இந்திய மருத்துவ சங்கம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வரும் சூழலில், சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் என அனைவரும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தினமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். அதில், சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை
 

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வரும் சூழலில், சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் என அனைவரும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தினமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். அதில், சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Almost crying young surgeon in medical mask stressed and depressed after working over hours due to coronavirus outbreak

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், கொரனோ இரண்டாவது அலையால் இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதிகபட்சமாக பீகாரில் 69 பேர், உத்தர பிரதேசத்தில் 34 பேர், டெல்லியில் 27 பேர் உயிரிழந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 3% மருத்துவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாகவும் டெல்லியை சேர்ந்த அனஸ் என்ற 25 வயது மருத்துவர் உட்பட 244 பேர் உயிரிழந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்திற்கு மேல் இருக்கும். ஆனால், இந்திய மருத்துவ சங்கத்தில் பதிவு செய்தவர்கள் 3.5 லட்சம் தான். மருத்துவ சங்கத்தில் பதிவு செய்த மருத்துவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மொத்த மருத்துவர்கள் எண்ணிக்கையை பார்த்தால் மருத்துவர்களின் உயிரிழப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.