நாய் கடித்து 5 வயது சிறுவன் பரிதாப பலி
Jun 28, 2025, 13:57 IST
கேரள மாநிலம் கண்ணூரில் வெறி நாய் கடித்து சேலத்தைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஹரித். வேலைக்காக இவர்கள் குடும்பம் கேரள மாநிலம் பையம்பலத்தில் வசித்துவருகின்றனர். கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஹரித்தை தெருவில் இருந்த வெறிநாய் அவரது வலது கண் மற்றும் இடது காலில் கடித்தது. உடனே சிறுவன் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தடுப்பூசி போட்டுள்ளனர். முகத்தில் ஏற்பட்ட காயங்களால் ரேபிஸ் மூளைக்குள் நுழைந்ததாகவும், இதனால் நிலைமை மோசமடைந்து சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. இரண்டு வாரங்களாக பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரித், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.