×

பூதாகரமான பரோட்டா ஜிஎஸ்டி பிரச்னை! விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம்

உணவகங்களில் உடனடியாக சாப்பிடும் பரோட்டாக்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது கர்நாடகாவை சேர்ந்த உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மனுவைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ‘Authority for Advance Ruling’அலுவலகம் ரொட்டி வகையில் பரோட்டா சேராது என்பதால் அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும், ரொட்டிக்கு விதிக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த பரோட்டா பிரியர்கள், #HandsOffParotta என்ற ஹாஷ்டேக்கில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா
 

உணவகங்களில் உடனடியாக சாப்பிடும் பரோட்டாக்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது

கர்நாடகாவை சேர்ந்த உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மனுவைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ‘Authority for Advance Ruling’அலுவலகம் ரொட்டி வகையில் பரோட்டா சேராது என்பதால் அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும், ரொட்டிக்கு விதிக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த பரோட்டா பிரியர்கள், #HandsOffParotta என்ற ஹாஷ்டேக்கில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி என்ற செய்தியை ட்விட்டரில் மேற்கோள்காட்டி, நாடு சந்திக்கும் அனைத்து சவால்களுடன் பரோட்டாவின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் நாம் கவலைபட வேண்டும் போல் தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பதை வைத்து மாயம் செய்யும் இந்திய திறமைகளை வைத்துப் பார்க்கும்போது விரைவில் பரொட்டிகள் என்ற புதிய உணவைத் தயார் செய்வார்கள் என்றும், அது ரொட்டியா, பரோட்டாவா என குழப்பமடைய செய்யும் என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பதப்படுத்தப்படாமல் உடனடியாக உண்ணக் கூடிய வகையில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிமாறக்கூடிய பரோட்டாக்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உடனடியாக சாப்பிடும் பரோட்டாக்களுக்கும், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் வைத்து சில நாட்கள் வரை பயன்படுத்தப்படும் பரோட்டாக்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக அரசு அதிகாரி ஒருவர், நாள்தோறும் ஏழை , எளிய மக்கள் உணவகங்களில் உண்ணும் உடனடியாக தயார் செய்யப்படும் பரோட்டாக்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக கூறியுள்ளார்.