×

BSNL சேவையின் 4G டெண்டர் ரத்து; ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

சீன உடனான தகராறில் BSNL சேவையின் 4G டெண்டரை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து நாளை BSNL ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். சமீபத்தில் இந்திய-சீன எல்லையான லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் எதிரொலியாக, மத்திய அரசின் பல திட்டங்கல்ளில் சீன நிறுவனம் பங்கேற்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. ரயில்வே துறையில் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த டெண்டர், சீன நிறுவங்களுடன் மகாராஷ்டிர
 

சீன உடனான தகராறில் BSNL சேவையின் 4G டெண்டரை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து நாளை BSNL ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

சமீபத்தில் இந்திய-சீன எல்லையான லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் எதிரொலியாக, மத்திய அரசின் பல திட்டங்கல்ளில் சீன நிறுவனம் பங்கேற்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. ரயில்வே துறையில் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த டெண்டர், சீன நிறுவங்களுடன் மகாராஷ்டிர அரசு ரூ.5500 கோடியில் போடப்பட்டிருந்த டெண்டர் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

அந்த வகையில், பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைக்காக சீன தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் போடப்பட்டிருந்த டெண்டரும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல், 4ஜி சேவைக்காக சீன உபகரணங்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பி.எஸ்.என்.எல்-க்கு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் BSNLக்கு 4ஜி சேவை வழங்க மறுத்த அரசின் நடவடிக்கையை கண்டித்து நாளை முழுவதும், சென்னை அண்ணாசாலையில் உள்ள BSNL தொலைபேசியகத்தில் ஊழியர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து BSNL ஊழியர்களால் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.