×

40 ஆண்டுகளாக காவல்துறையினருக்கு சேவை செய்த ஆதரவற்ற மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்த ஆந்திர காவல்துறையினர்!

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகேவுள்ள தாதேபள்ளி காவல்நிலையத்தில் காவலர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுசிறு வேலைகளை செய்துவந்த மூதாட்டி உயிரிழந்ததையடுத்து அவருக்கு காவலர்கள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் கணவர் இறந்துவிட, காவல்நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருந்த அந்த மூதாட்டி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். உடனே அந்த காவல் நிலையத்தில் பணிப்புரியும் காவலர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிதி திரட்டி மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்தியுள்ளனர். அந்த காவல்நிலையத்தில்
 

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகேவுள்ள தாதேபள்ளி காவல்நிலையத்தில் காவலர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுசிறு வேலைகளை செய்துவந்த மூதாட்டி உயிரிழந்ததையடுத்து அவருக்கு காவலர்கள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

40 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் கணவர் இறந்துவிட, காவல்நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்  தங்கியிருந்த அந்த மூதாட்டி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். உடனே அந்த காவல் நிலையத்தில் பணிப்புரியும் காவலர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிதி திரட்டி மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்தியுள்ளனர். அந்த காவல்நிலையத்தில் பணியாற்றி பின் வேறு காவல்நிலையத்திற்கு பணிமாறுதலில் சென்ற காவலர்களும் அந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அந்த மூதாட்டியின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் அங்கிருந்த காவலர்கள் அவரை செல்லமாக முகம்மா என அழைப்பதுண்டு.  முகம்மா காவல்நிலைய அதிகாரிகள் எந்தவேலைக்கொடுத்தாலும் சுறுசுறுப்பாக செய்துமுடித்துவிடுவார்.