×

கோழிக்கறி சாப்பிட்ட 4 வயது சிறுவன் பலி… தாயின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த காமாட்சி சுந்தரம் என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த பிங்கி என்ற அசாம் மாநில பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காமாட்சி மற்றும் பிங்கி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். இவர்களுக்கு
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த காமாட்சி சுந்தரம் என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த பிங்கி என்ற அசாம் மாநில பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

பின்னர் காமாட்சி மற்றும் பிங்கி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். இவர்களுக்கு கமலேஷ் என்ற 4 வயது மகன் இருக்கிறான். பிங்கி தனது மகனைக் கூட்டிக்கொண்டு தனது சொந்த ஊருக்கே சென்றுள்ளார். அங்கே லங்கேஸ்வரன் என்பவருடன் புதிதாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
நேற்று பிங்கி அவர்கள் வீட்டில் கோழி கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது பிங்கி தனது மகன் கமலேஷுக்கு கோழிக்கறியை சாப்பிட கொடுத்துள்ளார். உணவு ஊட்டும் போது முழு கறித்துண்டு இருப்பதைப் பார்க்காமல் அப்படியே ஊட்டியுள்ளார். கரித்துண்டு சிறுவன் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.


பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மகனின் இறப்பு குறித்து தந்தை காமாட்சி சுந்தரத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் காமாட்சியை வேண்டுகோள் விடுத்துள்ளார். பின்னர் மகனின் உடல் காமாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவரது சொந்த ஊரில் தகனம் செய்துள்ளார்.