×

‘கொரானாவால் இறந்த கோடீஸ்வரர்’ -அவரின் சொத்துக்களை ஆட்டைய போட திட்டமிட்ட கூட்டம் பிடிபட்டது..

மும்பையில் கொரானாவால் ஒரு 81 வயது முதியவர் கடந்த மாதம் இறந்தார் ,அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர் .இந்நிலையில் அவரின் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த ஷாஃபிக் ஷேக், அவரின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை எடுக்க திட்டத்தை தீட்டியதாகவும், மேலும் அதற்கு உடந்தையாக ஸ்வப்னில் வினோத் ஓக்லேகர், பிரிதேஷ் மாண்ட்லியா மற்றும் அர்ஷத் சயீத் ஆகியோர் இருந்ததாகவும் அவரின் ஆபீசில் பணிபுரியும் ஒருவர் போலீசில் புகார் கொடுத்திருந்தார் . இந்த புகாரை பெற்றுக்கொண்ட
 

மும்பையில் கொரானாவால் ஒரு 81 வயது முதியவர் கடந்த மாதம் இறந்தார் ,அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர் .இந்நிலையில் அவரின் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த ஷாஃபிக் ஷேக், அவரின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை எடுக்க திட்டத்தை தீட்டியதாகவும், மேலும் அதற்கு உடந்தையாக ஸ்வப்னில் வினோத் ஓக்லேகர், பிரிதேஷ் மாண்ட்லியா மற்றும் அர்ஷத் சயீத் ஆகியோர் இருந்ததாகவும் அவரின் ஆபீசில் பணிபுரியும் ஒருவர் போலீசில் புகார் கொடுத்திருந்தார் .


இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தானேவை சேர்ந்த அவர்கள் நால்வரையும் கைது செய்து விசாரணை செய்ததில் போலீசுக்கு நிறைய தகவல் கிடைத்துள்ளது
சனிக்கிழமையன்று, குற்றவியல் போலீசுக்கு கிடைத்த தகவல்படி,அவர்கள் போலியாக ஆதார் அட்டை ,போலி ஆவணங்கள் மற்றும் போலி பயனர் அடையாளங்கள் மற்றும் கடவுச்சொற்களின் உதவியுடன் பல கோடி ரூபாய் பணத்தை தங்களின் கணக்குக்கு மாற்ற முயன்ற விஷயம் வெளியே தெரிந்தது .இதனால் இந்த நால்வர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .


கொரானாவால் இறந்தவரின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் அவராலும் இவர்களை கண்காணிக்க முடியவில்லை .