×

ஏடிஎம்-ல் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசி சென்ற திருடர்கள்

 

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியால் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் கொள்ளை அடித்து தப்பிக்க முயன்ற கொள்ளையர்கள், போலீசாரிடமிருந்து தப்பிக்க கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசி சென்றனர். 

 
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில்  கொருட்லா நகரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்தவுடன் உள்ள இருந்த சி.சி.டி.வி. கேமிராவிற்கு மறைவாக துணியை வைத்து பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம்.இயந்திரத்தை உடைத்தனர். இதனால்  எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுக்கு அலாரம் மூலம் தெரிய வந்தது. உடனடியாக வங்கி அதிகாரிகள் அவசர போலீஸ் என் 100க்கு போன் செய்து தெரிவித்தனர்.  

காவல் கட்டுபாட்டு அறையில் இருந்து கொருட்லா காவல் நிலைய எஸ்.ஐ. சதீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுருந்த கொருட்லா காவல் நிலைய தலைமை காவலர் மேடி ராஜய்யா, காவலர் காட்டு ஸ்ரீனிவாஸ்,மது தனியார் டிரைவர் மது ஆகியோருக்கு எச்சரிக்கை செய்து அங்கு செல்லும்படி கூறினார். போலீசார் ஜீப்பில் வேகமாக ஏ.டி.எம்.மையத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் பணத்துடன்  காரில் தப்பிச் செல்ல முயன்றனர். 

போலீசார் வேகமாக வந்த கொள்ளையர்கள் கார் மீது மோதி பிடிக்க முயன்றும் அவர்கள் நிற்காமல் வேகமாக காரை ஓட்டி சென்றனர். போலீசார் காரை துரத்தி செல்வதற்குள் மீண்டும் கொள்ளையர்கள் கார் ஏடிஎம் உள்ள பகுதிக்கு வந்து தங்களை பிடிப்பதி போலீசாரை திசை திருப்ப சாலையில் பணப்பெட்டியை வீசிவிட்டு வேகமாக நிற்காமல் சென்று விட்டனர். இதனால் சாலையில் காற்றில் பறந்தபடி பணம் ரோட்டில் சிதறி விழுந்தது. 

இதனையடுத்து சாலையில் வீசப்பட்ட  ஏடிஎம்மில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.19,00,200 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஜகித்யாலா டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். உரிய நேரத்தில் தகவல் கிடைத்தவுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஏடிஎம் மையத்திற்கு சென்றதால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த பணியில் துரிதமாக செயல்பட்ட காவலர்களை  எஸ்.பி. சிந்து சர்மா பாராட்டு தெரிவித்தார்.