×

இந்தியாவை உலுக்கும் கொரோனா…ஒரே நாளில் உச்சகட்ட பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினந்தோறும் ஆயிக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அத்துடன் ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா வார்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் உடலை புதைக்க இடமில்லாமல் எரித்து வரும் நிலையில், அதற்கு கூட இரவு பகல் பாராது, டோக்கனுடன்
 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினந்தோறும் ஆயிக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அத்துடன் ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா வார்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் உடலை புதைக்க இடமில்லாமல் எரித்து வரும் நிலையில், அதற்கு கூட இரவு பகல் பாராது, டோக்கனுடன் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 4 லட்சத்து ஆயிரத்து 993பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கை 2,11,853 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது சற்று ஆறுதல் அளிக்க கூடியதாக உள்ளது. கொரோனா பாதித்த 32 லட்சத்து 68 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.