×

385 ஆலமரங்களைக் காப்பாறிய திம்மக்காவின் தில்!

கர்நாடகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் கூபியை சேர்ந்தவர் பத்மஸ்ரீ திம்மக்கா. உண்மையான சுற்றுச்சூழல் போராளி. கர்நாடகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் கூபியை சேர்ந்தவர் பத்மஸ்ரீ திம்மக்கா. உண்மையான சுற்றுச்சூழல் போராளி.தனியொருவராக 8000 மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். அதில் ஆல மரங்களும் அடக்கம். 80 வயதான இந்த மரங்களுக்கு இப்போது ஆபத்து வந்ததும் பொங்கி எழுந்திருக்கிறார் 107 வயது திம்மக்கா. திம்மக்காவுக்கும் சிக்கையாவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லை.அதனால் தற்கொலைக்கு முயன்ற திம்மக்காவை தடுத்த கணவர், பிள்ளை
 

கர்நாடகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் கூபியை சேர்ந்தவர் பத்மஸ்ரீ திம்மக்கா. உண்மையான சுற்றுச்சூழல் போராளி.

கர்நாடகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் கூபியை சேர்ந்தவர் பத்மஸ்ரீ திம்மக்கா. உண்மையான சுற்றுச்சூழல் போராளி.தனியொருவராக 8000 மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். அதில் ஆல மரங்களும் அடக்கம். 80 வயதான இந்த மரங்களுக்கு இப்போது ஆபத்து வந்ததும் பொங்கி எழுந்திருக்கிறார் 107 வயது திம்மக்கா.

திம்மக்காவுக்கும் சிக்கையாவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லை.அதனால் தற்கொலைக்கு முயன்ற திம்மக்காவை தடுத்த கணவர், பிள்ளை இல்லாவிட்டால் என்ன… அதற்கு பதில் மரங்களை நட்டு வளர்க்கலாம் என்று சொல்லி தேற்றினாராம்.

கல் குவாரித் தொழிலாளியான திம்மக்கா அன்று முதல் தீவிர மரம் வளர்ப்பில் இறங்கி பல்லாயிரம் மரங்களை நட்டு தண்ணீரை சுமந்துகொண்டு மைல் கணக்கில் நடந்து அந்த மரங்களை வளர்த்திருக்கிறார். அதற்காக அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

தற்போது கர்நாடக அரசு தும்கூர் மாவட்டம் பாஹே பள்ளி – கூதூர் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் இறங்கி இருக்கிறது. இதற்காக மாகடி முதல் கூதூர் வரையிலான இருவழிச்சாலையோரம் உள்ள மரங்களை அதிகாரிகள் வெட்டத்துவங்கினர்.இதில் திம்மக்காவால்  கூதூர் கிராமச்சாலையில் நட்டு வளர்க்கப்பட்ட ஆலமரங்களும் அடக்கம்.இந்தச் செய்தி திம்மக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பல ஆண்டுகாலம் தலையில் தண்ணீர் சுமந்து ஊற்றி தான் வளர்த்த மரங்களை வெட்டப்போகும் செய்தி அறிந்த திம்மக்கா, கர்நாடக முதல்வர் குமார சாமியையும், துணை முதல்வர் பரமேஷ்வரையும் சந்தித்து முறையிட்டார். 

அதை கேட்ட குமாரசாமி மரங்களை வெட்டாமல் சாலையை விரிவாக்கம் செய்யும்படி உத்தர விட்டார்.ஒரு மூதாட்டியின் குரல் முந்நூறு மரங்களை காப்பாற்றிய நாட்டில்தான் லட்சம் மரங்களை காப்பாற்ற கோடி பேர் குரல் கொடுத்தும் நடக்காமல் கோர்ட்டுக்கு போகவேண்டி இருக்கிறது!