×

3,500 கி.மீட்டர் வரை அணு ஆயுதங்களை எடுத்து சென்று தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி…..

3,500 கி.மீட்டர் தொலைவு வரை இலக்குகளை, அணு ஆயுதங்களை எடுத்து சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நீருக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவி இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் நம் நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நம்மிடம் ஏற்கனவே பி-02 நீர்மூழ்கி ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணை 700 கி.மீட்டர் தொலைவு வரை மட்டுமே அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்கும். ஐ.என்.எஸ். அரிஹந்த்
 

3,500 கி.மீட்டர் தொலைவு வரை இலக்குகளை, அணு ஆயுதங்களை எடுத்து சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நீருக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவி இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் நம் நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நம்மிடம் ஏற்கனவே பி-02 நீர்மூழ்கி ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணை 700 கி.மீட்டர் தொலைவு வரை மட்டுமே அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்கும். ஐ.என்.எஸ். அரிஹந்த் போர்க் கப்பலில் இந்த ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது அதனை காட்டிலும் 5 மடங்கு தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும்  கே-4 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்துள்ளது. 3 மீட்டர் உயரம் மட்டும் கே-4 ஏவுகணையை நேற்று விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதியில் டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்தது. சோதனையின் அனைத்து அனைத்து இலக்கு நோக்கங்களையும் ஏவுகணை நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது வரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நீர்மூழ்கி கப்பலிருந்து ஏவி 3,500 கி.மீட்டர் தொலைவு வரை இலக்கை சென்று தாக்கும் ஏவுகணைகளை வைத்துள்ளன. அந்த பட்டியலில் நம் நாடும் விரைவில் இடம் பிடிக்க உள்ளது.