×

மேற்கு வங்கத்தில் 35 அடி திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் மந்தர்மணி பகுதி கடற்கரையில் 35 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள மந்தர்மணி கடற்கரையில் 35 அடி திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் இன்று காலை கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலத்தின் மாபெரும் தலை இரத்த வெள்ளமாக காணப்பட்டது. அந்த திமிங்கலத்தின் உடலில் இரத்தம் ஏன், அதன் வால் மீது ஏன் காயங்கள் இருந்தது போன்ற
 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் மந்தர்மணி பகுதி கடற்கரையில் 35 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள மந்தர்மணி கடற்கரையில் 35 அடி திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் இன்று காலை கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலத்தின் மாபெரும் தலை இரத்த வெள்ளமாக காணப்பட்டது. அந்த திமிங்கலத்தின் உடலில் இரத்தம் ஏன், அதன் வால் மீது ஏன் காயங்கள் இருந்தது போன்ற விபரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இறந்த திமிங்கலத்தை காண அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடினர்.

இந்நிலையில், கரை ஒதுங்கிய திமிங்கலத்தை ஆய்வு செய்ய கிழக்கு மிட்னாபூர் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறைகளின் அதிகாரிகள் வந்திருந்தனர். வங்காள விரிகுடா கடற்கரையில் மந்தர்மணி உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த இடத்தை பார்வையிட இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.