×

கொரோனா தடுப்புப் பணியில் 343 போலிஸார் மரணம் – அமித்ஷா தகவல்

இந்தியாவில் இன்றைய தேதி வரை கொரோனாவின் மொத்த பாதிப்பு 77 லட்சத்து 6 ஆயிரத்து 947. இவர்களில் 68, 74,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 1,16,53 பேர் சிகிச்சை பலன் அளிக்காது இறந்துவிட்டனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் முன்கள வீரர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்தே பணியாற்றுகிறார்கள். அவர்களில், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஆட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர். காவலர் வீரவணக்கம் நாளில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர்
 

இந்தியாவில் இன்றைய தேதி வரை கொரோனாவின் மொத்த பாதிப்பு 77 லட்சத்து 6 ஆயிரத்து 947. இவர்களில் 68, 74,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 1,16,53 பேர் சிகிச்சை பலன் அளிக்காது இறந்துவிட்டனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் முன்கள வீரர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்தே பணியாற்றுகிறார்கள். அவர்களில், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஆட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர்.

காவலர் வீரவணக்கம் நாளில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”கொரோனா பெருந்தொற்று தொடங்கிய போது அதை எப்படி சமாளிப்பது என்று உலகம் அதிர்ச்சியில் இருந்தது. பொது முடக்கத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்த போது காவல்துறையினரும் மத்திய ஆயுத காவல் படையினரும் பெரும் பங்காற்றினர். பொது முடக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் காவல்துறையினர் முக்கிய பங்காற்றினர்.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்வது, உடல் நலமில்லாதவரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வது, ரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம் செய்வது என தங்களது கடமையை காவல்துறையினர் சிறப்பாகச் செய்தனர்.

கொரோனாவுக்கு எதிரான போரை முன் களத்தில் நின்று காவலர்கள் நடத்தியதை நமது பிரதமர் உட்பட ஒட்டுமொத்த நாடும் பாராட்டியது. கோவிட்-19-க்கு எதிரான போரில் 343 காவலர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களது தியாகம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்” என்றார்.