மின்னல் தாக்கி 48 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு! பீகாரில் சோகம்
பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திறந்த வெளியில் வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களாவர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மோசமான வானிலையின் போது அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வீட்டிற்குள் இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள் என்று முதல்வர் நிதிஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகபட்சமாக நாளந்தா மற்றும் வைசாலியில் தலா ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஷேக்புரா (ஐந்து), பாட்னா மற்றும் ஔரங்காபாத்தில் (தலா மூன்று), நவாடா மற்றும் பங்காவில் (தலா இரண்டு) உயிரிழந்துள்ளனர். இது தவிர, போஜ்பூர், பாகல்பூர், ரோஹ்தாஸ், கயாஜி, சமஸ்திபூர் மற்றும் ஜமுய் மாவட்டங்களில் தலா ஆறு இறப்புகள் நிகழ்ந்துள்ளன.