×

3000 தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்த யாஷ் முடிவு

கன்னட சினிமா தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேரின் வங்கிக்கணக்கில் தலா 5 ஆயிரம் ரூபாய் செலுத்த நடிகர் யாஷ் முடிவு செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவினால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு உதவி வேண்டுமென்று முன்வந்துள்ளார் நடிகர் யாஷ். அந்த வகையில் கன்னட சினிமா தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாயினை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த முடிவு செய்த யாஷ்,
 

கன்னட சினிமா தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேரின் வங்கிக்கணக்கில் தலா 5 ஆயிரம் ரூபாய் செலுத்த நடிகர் யாஷ் முடிவு செய்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு உதவி வேண்டுமென்று முன்வந்துள்ளார் நடிகர் யாஷ்.

அந்த வகையில் கன்னட சினிமா தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாயினை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த முடிவு செய்த யாஷ், இதற்காக 1.5 கோடி ருபாயினை ஒதுக்கியிருக்கிறார்.

இதுகுறித்து யாஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கிறது கோவிட் தொற்று. இதனால் நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரம் பாதித்திருக்கிறது.

இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு, எங்கள் திரைத்துறையினர் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்தச்செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயினை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த இருக்கிறேன்.

இந்த சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது நிச்சயம் தீர்வாகாது என்பது எனக்கு தெரியும். ஆனால், இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்குமென்பதற்கான நம்பிக்கைதான்’’என்று தெரிவித்திருக்கிறார்.