×

120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!

ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் பலிகள் முடிவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி சடலமாக மீட்கபட்டான் என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல் அலட்சியத்தால் விடப்பட்ட ஆழ்துளை கிணறு தற்போது 3 வயது சிறுவனை மீண்டும் பலிவாங்கியுள்ளது. தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிக்ஷபதி. கோடை காலம் என்பதால் நீர் இல்லாததால் விவசாயம் பார்க்க தனது
 

ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் பலிகள் முடிவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி சடலமாக மீட்கபட்டான் என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல் அலட்சியத்தால் விடப்பட்ட ஆழ்துளை கிணறு தற்போது 3 வயது சிறுவனை மீண்டும் பலிவாங்கியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிக்ஷபதி. கோடை காலம் என்பதால் நீர் இல்லாததால் விவசாயம் பார்க்க தனது நிலத்தில் 2 ஆழ்துளை கிணறுகளை அவர் தோண்டியுள்ளார். ஆனாலும் நீர் வரவில்லை. இதனால் மூன்றாவதாக ஒரு கிணறு தோண்ட அங்கிருந்து தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏற்கனவே திறந்த 2 கிணறுகளை பிக்ஷபதி அப்படியே விட்டுவிட்டார்.

பிக்ஷபதியின் மைத்துனர் கோவர்தனின் 3 வயது மகன் சாய்வர்தன் பிக்ஷபதி வீட்டிக்கு வந்துள்ளார். குழந்தை விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்த நிலையில் தவறி திறந்துவைக்கபட்ட 120 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இதை அறிந்த உறவினர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், தகவலறிந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர்  தொடர்ந்து பணி செய்து வந்தனர். முதலில் 20 அடி ஆழத்தில் இருந்த சிறுவன் தற்போது இன்னும் ஆழத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் சிறுவனை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரமானதால் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில்  இன்று காலை சிறுவன் சாய்வர்தனை  தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டனர். இந்த செய்தி அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.