☰
×

பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டு சிறை!

 

மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், பெற்றோரின் சொத்துக்களை அபகரித்த பிறகு அவர்களைப் புறக்கணிப்பவர்கள் அல்லது துன்புறுத்துபவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.


பெற்றோரிடம் சொத்துகளை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது.  இதுகுறித்து கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கூறுகையில், "உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் முதியோர் உரிமையை பாதுகாக்க சட்டம் நிறைவேற்றி உள்ளோம்.  ஆளுநரின் ஒப்புதலுக்கு பின் சட்டம் அமலுக்கு வந்தால், சொத்துகளை அபகரித்துவிட்டு பெற்றோரை கைவிட்டவர்கள் சிறை செல்வர். பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தையும் அபரித்த பிறகு அவர்களை புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையை கட்டாயமாக்கும் ஒரு விதியாய் நான் சட்டத்தில் சேர்த்துள்ளேன். தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக பல தாய்மார்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதை நான் பார்த்து இருக்கிறேன். பிள்ளைகள் பெரிய ஆட்களானதும், அவர்கள் தங்கள் பெற்றோரை புறக்கணிக்கிறார்கள். அது நடக்கக்கூடாது. கேரளாவில் அப்படிப்பட்ட கலாச்சாரம் இருக்க கூடாது. கேரளாவில் எந்தவொரு முதியவரும் தனிமைப்படுத்த கூடாது என்பதே எனது மிகப்பெரிய கனவு" என்றார்.