கழிவு ஆலையில் விஷவாயு? - 3 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கோழிக் கழிவு ஆலையில் சுத்தம் செய்யும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிகோடு அருகே உள்ள உரங்காத்திரியில் உள்ள கோழிக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 30, 2025) நடந்த விபத்தில் மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர். பலியானவர்கள் ஹிதேஷ் சரண்யா (46), விகாஸ் குமார் (29), மற்றும் சமத் அலி(20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹிதேஷ் மற்றும் விகாஸ் பீகாரைச் சேர்ந்தவர்கள், சமத் அசாமைச் சேர்ந்தவர். அவர்களின் உடல்கள் மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நீர் வடிகட்டுதல் தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் மூவரும் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுத்தம் செய்யும் பணியின் போது, ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து வெளியிடப்பட்ட கொடிய வாயுக்களால்
தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
.