×

#BREAKING பிறர் விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் இந்தியாவில் 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு

 

பிறர் புகையை சுவாசிப்பது (பாசிவ் ஸ்மோக்கிங்) குறித்து 'லான்செட்' ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


பிறர் புகையை சுவாசிப்பது (பாசிவ் ஸ்மோக்கிங்) குறித்து 'லான்செட்' ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2023-ல் இந்தியாவில் 44.4 கோடி பேர் பிறர் வெளியிடும் புகையை சுவாசிக்கும் சூழலில் இருந்துள்ளனர். இது 1990-ல் 37.5 கோடியாக இருந்தது. பிறர் புகையை நீண்டகாலம் சுவாசித்ததால் ஏற்பட்ட நோய்களால் 2023-ல் 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 1990-ல் 2.17 லட்சமாக இருந்த உயிரிழப்பு, 2023-ல் 3.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2023-ல் உலகளவில் 270 கோடி பேர் பிறர் புகையை சுவாசிக்கும் சூழலில் இருந்துள்ளனர். அதில் 76.7 கோடி பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள். பிறர் புகையை சுவாசிப்பது, குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.