×

‘அரசு அதிகாரியின் தோழி வீட்டில்’ 3.5 கிலோ தங்கம், ரூ.250 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்!

கர்நாடக அரசு அதிகாரியின் தோழி வீட்டில் ரூ.250 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உயரிய தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருபவர் சுதா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர், நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக பணியாற்றி வந்த போது பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அதிரடி சோதனையில் களம் இறங்கிய ஊழல் தடுப்பு படை அதிகாரிகள், சுதாவின் வீடு அலுவலகம் உட்பட 6 இடங்களில் சோதனை
 

கர்நாடக அரசு அதிகாரியின் தோழி வீட்டில் ரூ.250 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உயரிய தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருபவர் சுதா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர், நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக பணியாற்றி வந்த போது பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

அந்த புகாரின் பேரில் அதிரடி சோதனையில் களம் இறங்கிய ஊழல் தடுப்பு படை அதிகாரிகள், சுதாவின் வீடு அலுவலகம் உட்பட 6 இடங்களில் சோதனை நடத்தினர். அதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து, சுதா செய்த மோசடியில் அவரது தோழி ரேணுகா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

அதன் படி ரேணுகாவிற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்த அதிகாரிகள், ரூ.250 கோடி மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், 3.5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், காசோலைகள், 40 பாஸ்புக் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சுதாவின் சொத்துக்களுக்கு ரேணுகா பினாமி என்று கூறப்படும் நிலையில், அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அவரது கணவன் ஓய்வு பெற்ற நிலையில், மகன் அரசு ஊழியராக பணியாற்றி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.