×

சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இக்கோயிலின் அறக்கட்டளை தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திரமோடி அந்த அறைக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். சோம்நாத் சிவன் கோயில் அறக்கட்டளையின் தலைவராக இருந்த அம்மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய்பட்டேல் கடந்த அக்டோபர் மாதத்தில் காலமானார். அதையடுத்து புதிய தலைவருக்கான தேர்வு நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடியின் பெயரை அமித்ஷா
 

குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இக்கோயிலின் அறக்கட்டளை தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திரமோடி அந்த அறைக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.

சோம்நாத் சிவன் கோயில் அறக்கட்டளையின் தலைவராக இருந்த அம்மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய்பட்டேல் கடந்த அக்டோபர் மாதத்தில் காலமானார். அதையடுத்து புதிய தலைவருக்கான தேர்வு நடைபெற்றது.

அப்போது பிரதமர் மோடியின் பெயரை அமித்ஷா பரிந்துரை செய்யவும், உறுப்பினர்கள் அனைவரும் அதை வழிமொழிந்தனர். இதையடுத்து அறக்கட்டளையின் தலைவராக மோடி தேர்வானார்.

அத்வானி, அமித்ஷா, உள்ளிட்டவர்களும் அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக உள்ளனர்.