×

ஆயிரம் கிலோ மீன், ஐநூறு கிலோ இறைச்சி,ஆயிரம் கிலோ காய்கறிகள்.. மருமகனுக்கு மாமனார் வைத்த மகா விருந்து

10 ஆடுகள் 50 கோழிகள் ஆயிரம் கிலோ மீன்கள் 200 கிலோ இறால் 1000 கிலோ காய்கறிகள் 250 கிலோ மளிகை பொருட்கள் 250 வகையான ஊறுகாய்கள் 50 வகையான இனிப்புகள் இப்படி என மறு மகனுக்காக ஒரு மகா விருந்து கொடுத்திருக்கிறார் மாமனார் திருமணமான மகளுக்கு மகளை திருமணம் செய்து கொடுத்தவர்கள் ஆடி சீர் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அதுவும் தெலுங்கில் இது மிக பிரசித்தி பெற்ற விழாவாகவே நடக்கிறது. தெலுங்கில் ஆஷாதம் பொனாலு என்கிற
 

10 ஆடுகள் 50 கோழிகள் ஆயிரம் கிலோ மீன்கள் 200 கிலோ இறால் 1000 கிலோ காய்கறிகள் 250 கிலோ மளிகை பொருட்கள் 250 வகையான ஊறுகாய்கள் 50 வகையான இனிப்புகள் இப்படி என மறு மகனுக்காக ஒரு மகா விருந்து கொடுத்திருக்கிறார் மாமனார்

திருமணமான மகளுக்கு மகளை திருமணம் செய்து கொடுத்தவர்கள் ஆடி சீர் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அதுவும் தெலுங்கில் இது மிக பிரசித்தி பெற்ற விழாவாகவே நடக்கிறது.

தெலுங்கில் ஆஷாதம் பொனாலு என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாவில் மணமான மகளுக்கு தந்தை சீர் செய்வது வழக்கம். தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பி வைத்த பிறகு மகளின் புகுந்த வீட்டிற்கு பெற்றோர் இப்படி சீர் செய்து அனுப்புவது வழக்கம்.

அப்படித்தான் ஆந்திர மாநிலத்தை ஒட்டியிருக்கும் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் ஆஷாதம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏனாமை சேர்ந்த பவன் குமாரின் மாமனார் ராஜமுந்திரியில் இருக்கிறார். ஏனாம் மாவட்டத்தில் நடந்த விழாவில் மருமகன் பவன்குமாருக்கு இத்தனை சீர் வரிசையையும் ஊர்வலமாக எடுத்து வந்து கொடுத்திருக்கிறார் மாமனார் பலராமகிருஷ்ணா.

வழக்கமாக இந்த விழாவில் மகள்களுக்கு பெற்றோர் சீர்வரிசை கொடுப்பது வழக்கம்தான் என்றாலும் பல ராமகிருஷ்ணா கொடுத்த வித்தியாசமான சீர்வரிசை பார்த்து விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

மருமகன் தன் மகளை சந்தோசமாக வைத்திருப்பதால் இத்தனை சிறப்பாக சீர் செய்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பலராமகிருஷ்ணா.