×

ஆட்டுக்கறியால் வந்த ஆத்திரம்: மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்

திருமணத்திற்கு முதல் இரவு நடந்த வரவேற்பில் ஆட்டுக்கறி விருந்து வைக்காததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு தாலி கட்டாமல் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார். ஒடிசா மாநிலம் ஜஜ்பூரை சேர்ந்தவர் ராமகாந்த் பத்ரா(27). இவருக்கும் சுகிந்தா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் இரவில் வைக்கப்பட்ட விருந்தில் ஆட்டுக்கறி இல்லை என்று மாப்பிள்ளை வீட்டார் ரகளை செய்தனர். பொறுத்து பொறுத்துப்பார்த்த பெண் வீட்டாரும் பதிலுக்கு
 

திருமணத்திற்கு முதல் இரவு நடந்த வரவேற்பில் ஆட்டுக்கறி விருந்து வைக்காததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு தாலி கட்டாமல் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார்.

ஒடிசா மாநிலம் ஜஜ்பூரை சேர்ந்தவர் ராமகாந்த் பத்ரா(27). இவருக்கும் சுகிந்தா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற இருந்தது.

திருமணத்திற்கு முதல் நாள் இரவில் வைக்கப்பட்ட விருந்தில் ஆட்டுக்கறி இல்லை என்று மாப்பிள்ளை வீட்டார் ரகளை செய்தனர். பொறுத்து பொறுத்துப்பார்த்த பெண் வீட்டாரும் பதிலுக்கு ரகளையில் ஈடுப்பட்டனர். இந்த விசயல் மணமகன் ராம்காந்த் காதுக்கு செல்லவும் அவர் ஆத்திரமாகிவிட்டார். உடனே திருமணம் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார் அவர்.

உறவினர் வீட்டில் சென்று தங்கியவருக்கு பெண் வீட்டாரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் நினைத்து, அதே இரவில் புல்ஜாராவை சேர்ந்த பெண்ணுக்கு தாலி கட்டினார்.

மணப்பெண் வீட்டார் மணமகன் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.