×

பன்றி மூக்கு தவளை.. ‘கேரள மாநில தவளை’யாக அறிவிக்கப்படுமா?

பன்றி மூக்கு கொண்ட அரிய வகை தவளை இனமான ‘பர்ப்பிள்’இன தவளை ‘கேரள மாநில தவளை’யாக அறிவிக்க கோரிக்கை எழுந்திருக்கிறது. உடல் பார்ப்பதற்கு ஆமை வடிவிலும் மூக்கு பன்றி மூக்கு மாதிரியாகவும அமைந்திருக்கும் இந்த அரிய இன தவளை 2003ம் ஆண்டில் கேரள மாநிலம் இடுக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி பேராசிரியர் எஸ்.டி. பிஜூ கண்டுபிடித்தார். கேரளாவில் பிறந்த டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் ‘உலகின் தவளை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் வாழ்கின்றன
 

பன்றி மூக்கு கொண்ட அரிய வகை தவளை இனமான ‘பர்ப்பிள்’இன தவளை ‘கேரள மாநில தவளை’யாக அறிவிக்க கோரிக்கை எழுந்திருக்கிறது.

உடல் பார்ப்பதற்கு ஆமை வடிவிலும் மூக்கு பன்றி மூக்கு மாதிரியாகவும அமைந்திருக்கும் இந்த அரிய இன தவளை 2003ம் ஆண்டில் கேரள மாநிலம் இடுக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி பேராசிரியர் எஸ்.டி. பிஜூ கண்டுபிடித்தார். கேரளாவில் பிறந்த டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் ‘உலகின் தவளை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் வாழ்கின்றன இந்த தவளைகள். மழைக்காலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. சில நாட்கள்தான் வெளியில் இருக்கும். பின்னர் பூமிக்குள் சென்றுவிடுகின்றன. வருடத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே இதனை பூமிக்கு வெளியே பார்க்க முடியும்.இத்தகைய தவளையின் உடம்பு பெரிதாக இருக்கின்றன. ஆனல், தலை சிறியதாக இருக்கின்றன. இந்த தவளை 170 கிராம் எடை இருக்கிறது. 6-9 செ.மீ. நீளம்தான்.

பூமிக்கு அடியில் இருக்கும் புழு பூச்சிகளை தனது நீண்ட நாக்கினால் கவர்ந்து இழுத்து உணவாக்கிக்கொள்கின்றன. இந்த தவளையின் வாழ்க்கை முறை மர்மம் நிறைந்தது என்றும், முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தத் தவளையின் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் ஆப்ரிக்காவிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுவதால் ஒரு காலத்தில் இந்தியாவும் ஆப்ரிக்கக் கண்டமும் ஒன்றாக இணைந்திருந்தது என்ற கருத்துக்கு இது வலுசேர்க்கிறது என்று தெரிவித்துள்ளார் பிஜூ.

கேரள மாநிலத்தில் பெரியாறு, புலிகள் சரணாலயத்திலும் தமிழகத்தில் ஆனைமலை புலிகள் சரணாலய பகுதிகளிலும் இந்த தவளை இனம் இருக்கின்றன. இந்த தவளை மருத்துவ இனம் என்று கூறி, வேட்டையாடப்பட்டு வருவதால், இவ்வினம் அழிந்துபோகும் நிலையில் இருக்கிறது. அழிந்து வரும் இனங்களின் பட்டியலிலும் இந்த தவளை சேர்க்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய அரிய இனத்தினை பாதுகாக்க, இந்த் பர்ப்பிள் இன தவளையை, கேரள மாநில தவளையாக அறிவிக்க வேண்டும் என்று கேரள வனத்துறை அம்மாநில அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது.