×

ஒரே நாளில் 2,677 பேர் உயிரிழப்பு : தொடர்ந்து குறையும் கொரோனா!

இந்தியாவில் ஒரேநாளில் 1,89,232 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 1,14,460 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . நேற்று முன்தினம் 1.32 லட்சம், நேற்று 1.20 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.14
 

இந்தியாவில் ஒரேநாளில் 1,89,232 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 1,14,460 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . நேற்று முன்தினம் 1.32 லட்சம், நேற்று 1.20 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.14 லட்சமாக குறைந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,86,94,879லிருந்து 2,88,09,339 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,677 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3,44,082லிருந்து 3,46,759 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.. இந்தியாவில் ஒரேநாளில் 1,89,232 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.38% ஆக உள்ளது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.20% ஆக உள்ளது.